நாகை மாவட்டம் புதுப்பட்டிணம் கிராமத்திலுள்ள உறவினர் வீட்டுக்கு செல்கிற வழியிலுள்ள ஹோட்டலில் உணவருந்தியபோது வாய்த் தகராறு ஏற்பட்டது அப்போது ஹோட்டல் உரிமையாளர் இளைஞர்களின் சாதியைத் தெரிந்துகொண்டு சாதிய வன்மத்தோடு சாதியினை குறிப்பிட்டு பேசியிள்ளார்.
அதை இளைஞர்கள் தட்டிக் கேட்டவுடன் ஹோட்டல் உரிமையாளர் தனது உறவினர்களை வரவழைத்து அந்த இளைஞர்களை ஹோட்டலுக்குள் பூட்டிவைத்து சராமாரியாக தாக்கியுள்ளார்.
இதை அறிந்த அந்த இளைஞர்களின் நண்பர்கள் சம்பவ இடத்திற்கு வந்தவர்களை சாதிவெறியர்களோடு சேர்ந்துகொண்ட காவல்துறை அந்த இளைஞர்களை கொடூரமாக தாக்கும் காட்சி.
இந்த விவகாரத்தில் காவல்துறை சாதிதுறையாக செயல்பட்டது மிகவும் கண்டனத்திற்கூறியது.
ஒடுக்கபடும் பட்டியல் சமுகத்தினரின் பாதுகாப்பு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.