ஞாயிறு, 14 மே, 2017

இளம் பெண்ணை கூட்டு வன்புணர்வு செய்து அடித்துக்கொன்ற கும்பல்! ஹரியானாவில் கொடூரம்


ஹரியானாவில் இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சோனிபட் நகரம். இந்நகரை சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவரை,மர்ம கும்பல் ஒன்று கடந்த செவ்வாய் கிழமை அன்று ரோஹத் நகருக்கு கடத்தி சென்றனர். பின்பு அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கும்பல், அவரின் தலையை செங்கற்களைக் கொண்டு சிதைத்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர்.

இந்நிலையில் ரோஹத் நகருக்கு அருகில் உள்ள ஒரு எஸ்டேட் பகுதியில்   முகங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த பெண்ணின் உடலை கடந்த வியாழக்கிழமை அன்று போலீசார் மீட்டனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட சுமித், விகாஸ் ஆகிய இருவரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர், தங்களுடைய மகள் காணாமல் போனதாக புகார் கொடுத்தும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர். மேலும், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும், அவர்கள் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டனர். இச்சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகந்தி, காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்டோர் கடும் கண்டனங்கள தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், நாம் சுதந்திர தேசத்தில்தான் வாழ்கின்றோமா என்ற கேள்வியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
source: kaalaimalar 

Related Posts: