வெள்ளி, 26 மே, 2017

லகின் எந்த மூளையிலும் இல்லாத ஒரு அதிபயங்கரம் தமிழகத்தில் நிகழ போகிறது..! அபாய கட்டத்தை நெருங்கிய கல்பாக்கம் அணு உலை கதிர் வீச்சு

உலகில் எந்த ஒரு இடத்திலுமே இல்லை ஏன் அமெரிக்கா உட்பட சில நாடுகளில் முயன்று பாதுகாப்பு கருதி அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர்..
தொழில்நுட்பத்தில் அறிவு உள்ள அமெரிக்காவே இதை நிறுவ தயங்கி வேண்டாம் என்று ஒதுங்கி விட்டது.
ஆனால் நம்ம அரசியல்வாதிகள் அனுமதித்துள்ளனர் காரணம் என்ன தெரியுமா ?
இதன் மதிப்பீடு சொன்னால் புரிந்து கொள்வீர்கள் ஆம் இதன் மதிப்பீடு 56 .77 பில்லியன் ரூபாய் (மில்லியன் அல்ல) இப்போது தெரிகிறதா ?
கல்பாக்கம் அணு உலையில் சில அசம்பாவிதங்கள் நடப்பதாக தொடர்ந்து நமக்கு செய்தி வந்தவண்ணம் இருக்கிறது.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஏற்படும் அடுத்தடுத்த பிரச்னைகளால் அச்சத்துக்கு ஆட்பட்டுள்ளனர் தொழிலாளர்கள்.
” அணுமின் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாரி ஒருவர் இறந்துவிட்டார்.
பலரும் நோய்வாய்ப்பட்டுள்ளனர். ‘என்ன நடந்தது?’ என்பதைப் பற்றி அணுமின் நிலைய நிர்வாகம் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை’ என்கின்றனர் ஊழியர்கள்.
கிடைத்த தகவலின்படி, ஆயிரம் டி.ஏ.சியில் இருந்து பத்தாயிரம் டி.ஏ.சி வரைக்கும் கதிர்வீச்சு தன்மை அதிகரித்துவிட்டது என்பதுதான்.
இப்படி ஏதாவது நடந்தால், தொழிலாளர்களுக்கு உடனே டிஸ்பிளேவில் போட்டுக் காட்ட வேண்டும். இந்தமுறை எந்த டிஸ்பிளேவிலும் இதைக் காட்டவில்லை.
‘ஆயிரம் டி.ஏ.சி ஹவர் வந்தாலே மூட வேண்டும்’ என்ற விதியை அணுமின் நிலைய நிர்வாகம் மீறிவிட்டது.
அதேபோல், சில நாட்களுக்கு முன்பு, ‘ கட்டடத்தைவிட்டு(Reactor building-1) உடனே வெளியேறுங்கள்’ என தமிழ், ஆங்கிலம், இந்தியில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அணுமின் நிலைய நிர்வாகம்.
கதிர்வீச்சு அளவு அதிகரித்ததுதான் இதற்குக் காரணம். காற்றில் உள்ள கதிர்வீச்சின் அளவை இவர்கள் ஏன் மறைக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.
இந்த அரசியல்வாதிகள் சம்பாதிக்க எம் மக்கள் பலிகடா ஆக்குகிறான் …
உண்மை உலகிற்கு ஒரு நாள் தெரியும் அப்போது நாயை அடித்து வீதியில் போடுவது போல இந்த இந்தியாவின் அரசியல்வாதிகள் நிலை இருக்கும்.
உலகின் எந்த மூளையிலும் இல்லாத ஒரு அதிபயங்கரம் தமிழகத்தில் நிகழ போகிறது..! அபாய கட்டத்தை நெருங்கிய கல்பாக்கம் அணு உலை கதிர் வீச்சு..!

http://kaalaimalar.in/kalpakkam-nuclear-power-station-safety-measure/

Related Posts: