தர்மபுரி(19 மே 2017): பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில் மதிப்பெண் பட்டியலில் குளறுபடி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த நெற்குந்தி கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் மகள் சங்கீதா 450 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவருக்கான மதிப்பெண் பட்டியலில் பெண் என்பதற்கு பதிலாக 3-ம் பாலினத்தவர் என்று உள்ளது. இதை மாணவி கண்டுபிடித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் கூறினார். அவர் கல்வி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அவருடைய சான்றிதழில் திருத்தம் செய்து கொடுக்க கல்வி துறை ஏற்பாடு செய்துள்ளது.
மேலும் இதுபோன்று தவறுதலாக பதிவு செய்யப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் செய்து வழங்கப்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.
http://kaalaimalar.in/sslc-2017-result-tn-mistakes/