தமிழக அரசு தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் அரசு கூறியதை விட பத்து மடங்கிற்கு மேல் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அது குறித்து ஒரு செய்தி தொகுப்பு:
சேலத்தில் தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட லட்சக்கணக்கில் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன.
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வந்தாச்சு நாங்க தான் முதலிடம்னு சொல்லி கட்டண கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம் போட தர வரிசை முறை ஒழிக்கப்பட்டாலும், கட்டண கொள்ளை ஒழிந்தபாடில்லை.
சேலத்தில் திருவகவுண்டனூரில் உள்ள எஸ்.ஆர்.கே பள்ளியில் 11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு 69 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை மதிபெண்ணுக்கு தகுந்தாற் போல கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.
60 ஆயிரம் ரூபாயை வாய் கூசாமல் வாங்கி போடும் இந்த பள்ளிகூடத்துக்கு அரசு நிர்ணயித்த கட்டணமோ 8 ஆயிரம் ரூபாய் மட்டுமே.
அதே போல் சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள HOLY ANGELS மெட்ரிக்குலேஷன் பள்ளி தங்கள் வசதிக்கு ஏற்ப 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை கட்டணம் வசூல் செய்து கொள்கின்றனர்.
மேலும் சேலம் ராமகிருஷ்ணா பகுதியில் உள்ள CLUNY மெட்ரிக்குலேஷன் பள்ளி 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை கட்டணம் வசூல் செய்து வருவதாக குற்றச்சாட்டப்படுகிறது.
சேலம் மாமங்கம் அருகே உள்ள செந்தில் பப்ளிக் சிபிஎஸ்சி பள்ளி 11ம் வகுப்பு சேர்க்கைக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் முதல் 1 லட்சத்து 70 ஆயிரம் வரை பணம் வசூல் செய்வதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
இதில் ஒருசில பள்ளிகள் புத்திசாலி தனமாக செயல்பட்டு பணத்தை கையில் வாங்காமல் தங்கள் அறக்கட்டளைக்கு வங்கி கணக்கில் செலுத்த சொல்லி அதற்கான வங்கி இரசீதையும் கொடுத்து அனுப்புகின்றனர்.
கல்வியை வியாபாரமாக்கி பெற்றோரை பணம் காய்க்கும் மரமாக பார்க்கும் பள்ளிக்கூடங்கள் உள்ளவரை கல்வியின் தரம் உயரவாய்ப்பில்லை என்பதே அனைவரின் ஆதங்கம்.