கரூர் அருகேயுள்ள கருப்பம்பாளையம் கிராமம் அருகே ஏசியன் பேப்ரிக்ஸ் என்ற பெயரில் சாயப்பட்டறை நிறுவனம் ஒன்று செயல்பட்டுவருகிறது.
இந்த சாயப்பட்டறை நிறுவனத்தில் இருந்து வெளியேறும் விஷ வாயுவால் அப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது. ஆடு, மாடுகள் நல்ல குடிநீர் இன்றி பலியாகி வந்தது.
விவசாய பயிர்கள் விளைச்சல் இன்றி கருகும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இன்று அந்த ஊரில் வசிக்கும் 200 குடும்பத்தினர் ஊரை காலி செய்து, தங்கள் வீட்டு பொருட்கள் மற்றும் ஆடு, மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
source: kaaalaiamalar