ஞாயிறு, 14 மே, 2017

பைத்தியம், நாய்.. லைவ் ஷோவில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளரை அவமானப்படுத்திய அர்ணாப்!

மும்பை: காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரிஜேஷ் கல்லப்பாவை, மனநலம் பாதித்தவர், சோனியா காந்தி குடும்பத்தின் நாய்க்குட்டி என்றெல்லாம் அமவமரியாதையாக லைவ் ஷோவில் பேசியுள்ளார் பிரபல பத்திரிகையாளர் அர்ணாப் கோஸ்வாமி.
டைம்ஸ் நவ் சேனலில், நியூஸ் ஹவர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அர்ணாப் கோஸ்வாமி. சத்தம் போட்டு பேசி பிறர் பேசுவதை கேட்கவிடாமல் செய்து தனது கருத்தை நிலைநாட்டுவது இவரது வாடிக்கை. இப்படி சத்தம்போட்டு பிறரை அடக்கி வைத்துவிட்டு தனக்கு பிடித்த கருத்தை நிலை நிறுத்துவதை ரசிக்கவும், வெறுக்கவும் என இரு தரப்பு ரசிகர்கள் இவருக்கு உண்டு.
புதிய டிவி சேனல் டைம்ஸ் நவ் சேனலில் இருந்து விலகிய இவர் சமீபத்தில் துவக்கப்பட்ட ரிபப்ளிக் டிவி சேனலில் ஆசிரியர் பொறுப்பில் உள்ளார். சேனல் ஆரம்பித்தது முதலே, லாலு பிரசாத் யாதவ், கேஜ்ரிவால், சோனியா காந்தி உள்ளிட்ட, பாஜக எதிர்ப்பாளர்களுக்கு எதிரான செய்திகளையும், குற்றச்சாட்டுகளையும் ஒளிபரப்பி வருகிறார் அர்ணாப்.
பாஜக ஆதரவாளர் பணம் மேலும், இந்த டிவி சேனலில் கேரளாவை சேர்ந்த பாஜக ஆதரவு எம்.பி ஒருவர் அதிக பணத்தை முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அர்ணாப்பின் நிகழ்ச்சிகளும் இதை உறுதி செய்வதாக இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு உள்ளது.
பிரிஜேஷ் கல்லப்பாவுடன் விவாதம் இந்த நிலையில், யங்க் இந்தியா விவகாரம் தொடர்பாக, ரிபப்ளிக் டிவி சேனல் தொகுப்பாளர் ஷீத்தல் ராஜ்புத் என்பவர், பிரிஜேஷ் கல்லப்பாவை போனில் தொடர்பு கொண்டு கருத்து கேட்டார்.
அப்போது பேச்சு உஷ்ணமானது. ஆட்சியை கலைக்கின்ற சூழல் எங்களால் உருவாகாது.. ஓபிஎஸ் திட்டவட்டம் ! பிளஸ் 2 ரிசல்ட்: 100 சதவீதம் தேர்ச்சி பெறாத அரசு பள்ளிகள் இவைதான்!! ராணுவ வீரர் மனைவி பலாத்காரம் செய்து படுகொலை..
பாஜக பத்திரிகையாளர் பேசிக்கொண்டிருந்தபோது, நீங்கள் பாஜக பத்திரிகையாள்தானே என பிரிஜேஷ் கல்லப்பா கேட்டார். அதற்கு ஷீத்தல் ராஜ்புத், கல்லப்பா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது இருவருமே காரசாரமாக பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அர்ணாப் குறுக்கே வந்து, ஷீத்தலிடமிருந்து மைக்கை வாங்கி பிரிஜேஷ் கல்லப்பாவிடம் பேச ஆரம்பித்தார். அர்ச்சனைகள் அடேங்கப்பா ஆரம்பத்திலேயே ‘ஷட் ஆப்’ என கல்லப்பாவை பார்த்து அதிகாரமாக கூறி பேச்சை ஆரம்பித்தார். அதனால் அதிர்ச்சியடைந்த கல்லப்பா, உங்கள் வார்த்தையை கவனமாக பேச வேண்டும் என ஆங்கிலத்தில் கூறினார்.
ஆனால் இதை பொருட்படுத்ததாக அர்ணாப்போ, கல்லப்பா, மனநலன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடனே மனநல மருத்துவரை அணுக வேண்டும் என்றும்,இவரை போன்றவர்களிடம் பேச விரும்பவில்லை என்றும் கூறினார்.
சோனியாகாந்தி குடும்பத்தின் நாய்க்குட்டி என்றும் பிரிஜேஷ் கல்லப்பா பற்றி வர்ணனை செய்தார் அர்ணாப். பைத்தியம் என்று தன்னைத்தானே பிரிஜேஷ் கல்லப்பா ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் ‘கட்டளையிட்டார்’ அர்ணாப். இந்த வீடியோ காட்சிகள் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.
source: republic, kaalaimalar