வெள்ளி, 12 மே, 2017

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க விவசாயிகள் முடிவு! May 12, 2017

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க விவசாயிகள் முடிவு!


தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரும் 18ம் தேதி மீண்டும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் விவசாயிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேச்சாவடியில் இருந்து தொடங்கிய பேரணியை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின் அடுத்தகட்ட போராட்டம் குறித்து வரும் 21ம் தேதி முடிவு செய்ய உள்ளதாக குறிப்பிட்டார். மேலும், வரும் 18ம் தேதி தமிழக முதலமைச்சரை சந்தித்துப் பேச உள்ளதாகவும், அப்போது தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி வலியுறுத்த உள்ளதாகவும் அய்யாகண்ணு தெரிவித்தார்.

Related Posts: