
பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுப்பதால் மனமுடையும் மாணவர்கள், விபரீத முடிவுகள் எடுப்பதை தடுக்கும் நோக்கத்துடன், 104 என்ற தொலைபேசி எண்ணில் இலவச கவுன்சிலிங் வழங்கப்படுகிறது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இந்த சேவையை தொலைபேசி வாயிலாக பெற முடியும் என தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மையம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த 104 எண்ணிற்கு தொடர்பு கொண்டு மாணவர்களும், பெற்றோரும் இலவச ஆலோசனைகளை பெறலாம்.
பொதுத் தேர்வு முடிவுகளை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து 8 உளவியல் நிபுணர்கள் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குகின்றனர். தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மையம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் இந்த ஏற்பாடு நான்காவது ஆண்டாக செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 8 உள்வியல் நிபுணர்கள், நர்ஸ் உள்ளிட்டோர் இந்த பணியில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை வழங்குவார்கள்.
தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு, தேர்வு முடிவிற்கு முன்பும், தேர்வு முடிவிற்கு பின்பும் என மூன்று கட்டங்களாக ஆலோசனை கொடுக்கப்பட்டு வருகிறது.