சீனாவில் இன்று தொடங்கவுள்ள சாலை தொடர்பான இருநாள் சர்வதேச மாநாட்டை இந்தியா புறக்கணிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய-மேற்கு ஐரோப்பிய நாடுகளை சாலை வழியே இணைக்கும் திட்டத்திற்கான BRF எனப்படும் உயர்மட்ட மாநாடு, சீனத் தலைநகர் பீஜிங் நகரில் இன்று தொடங்க உள்ளது. இதில், ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, தென் கொரியா, பாகிஸ்தான், வங்கதேசம் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
மாநாட்டில் இந்தியத் தரப்பில் பிரதிநிதி யாரேனும் நிச்சயம் கலந்துகொள்வார் என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யூ கூறியிருந்தார். ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பொருளாதார சாலை வழித் திட்டம் கொண்டுச் செல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்த மாநாட்டை புறக்கணிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மாநாட்டில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் கலந்துகொள்ள உள்ளார்.