ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் கவுதமன் உள்ளிட்டோர் நெடுவாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 33 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஒவ்வோரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்களில் நெடுவாசல் பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் ஏராளமானோர் பங்கெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற போராட்டத்தில் இயக்குநர் கவுமன் கலந்து கொண்டு பேசினார். அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழகத்தில் ஒருபோதும் மக்கள் அனுமதியளிக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.