Ransomware கம்யூட்டர் வைரஸ் தாக்குதலை அடுத்து இந்தியாவில் உச்சபட்ச கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது.
ரான்சம்வேர் (Ransomware) எனப்படும் கம்யூட்டர் வைரஸ் கடந்த இரு தினங்களாக உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. கம்யூட்டரில் நுழைந்து நமது தகவல்களை ஹாக் செய்வதுடன், ஹாட் டிஸ்கில் சேமித்து வைத்துள்ள தகவல்களையும் அழித்துவிடுவதாக மிரட்டி 300 டாலர்கள் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.
100-க்கும் மேற்பட்ட நாடுகளின் கம்யூட்டர்களை தாக்கியுள்ள ரான்சம்வேர் வைரஸ், உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. இதுவரை 45,000-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை wannacry Ransomware மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலேயே அதிக அளவிலான Ransomware வைரஸ் தாக்குதல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட இடங்களின் ஒருசில பகுதிகளில் Ransomware தாக்குதல்கள் அறியப்பட்டுள்ளது. Ransomware தாக்குதலுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியாவை சில இணைய தளங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்நிலையில், இந்தியாவில் இந்த வைரஸின் தாக்குதலை முறியடிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஏ.டி.எம்கள் மூடப்பட்டுள்ளதாகவும், இதற்கான உத்தரவை ரிசர்வ் வங்கியே பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. என்ற போதிலும், இத்தகைய உத்தரவுகள் எதையும் பிறப்பிக்கவில்லை என ரிசர்வ் வங்கி சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சைபர் செக்யூரிட்டி யூனிட்டான CERT-IN இந்த வைரஸ் தொடர்பான தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்ற போதிலும், அடுத்த இரு தினங்களுக்கு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் CERT-IN தெரிவித்துள்ளது.
சென்னையில் ரெனால்ட் - நிஸான் நிறுவனத்தின் கம்யூட்டரில் ‘wannacry’ Ransomware ஹாக்கிங் நிகழ்த்தப்பட்டதாகவும், இந்திய சைபர் கிரைம் அதிகாரிகளின் விரைவான நடவடிக்கையால் பெரிய அளவிலான பாதிப்புகள் நிகழவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, ‘wannacry’ Ransomware வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவே காரணம் என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் குற்றம்சாட்டியுள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனம் அமெரிக்காவை குற்றம்சாட்டியுள்ள நிலையில், ‘இவ்விவகாரத்தில் தாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை’ என்றும், இதற்கு அமெரிக்காவே காரணம் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஜப்பானில் 2,000-க்கும் மேற்பட்ட கம்யூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ள நிலையில், சீனாவில் 30,000-க்கும் அதிகமான கம்யூட்டர்களை ‘wannacry’ Ransomware பாதித்துள்ளது.
திங்கட்கிழமை காலை வரை, தங்களது கம்யூட்டரில் உள்ள தகவல்களை ஹாக்கர்களிடம் இருந்து மீண்டும் பெறுவதற்காக பல்வேறு நபர்களும் மொத்தமாக 33,000 யூரோக்கள் வரை பணம் செலுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.