1 லட்சம் பிளாஸ்டிக் குண்டுகளையும், மிளகாய் நிரம்பிய PAVA குண்டுகளையும் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர்ந்து நடைபெற்று வரும் கலவரங்களை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. காஷ்மீரில் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தியதால் மத்திய அரசு கடும் விமர்சனத்திற்குள்ளானது.
இந்நிலையில், பெல்லட் குண்டுகளை விட ஆபத்து குறைவான பிளாஸ்டிக் குண்டுகளையும், மிளகாயில் இருந்து எடுக்கப்படும் வேதிப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும் PAVA குண்டுகளையும் காஷ்மீர் போராளிகள் மீது பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது.
பிளாஸ்டிக் குண்டுகள் பரீட்சார்த்த முறையில் சோதிக்கப்பட்டு விட்டதாகவும், பெல்லட் குண்டுகளை பயன்படுத்துவதற்கு முன்பாக பிளாஸ்டிக் குண்டுகளை பயன்படுத்தி கூட்டத்தை கலைக்க முயற்சிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சாதாரண AK-47 ரக துப்பாக்கிகளில் இருந்தே பிளாஸ்டிக் குண்டுகளை பயன்படுத்த முடியும் என்றும், ஆனால் இவைகளை பயன்படுத்தும் போது ஒருமுறை மட்டுமே சுட முடியும் என்றும் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், துப்பாக்கிகளை பயன்படுத்துவதற்கு முன்பாக கூட்டத்தை கலைக்க ராணுவத்தினால், புகை குண்டுகள், PAVA குண்டுகள், ரப்பர் குண்டுகள், கேஸ் குண்டுகள், பிளாஸ்டிக் குண்டுகள் மற்றும் பெல்லர் குண்டுகளை பயன்படுத்த இயலும்.