புதிய 200 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கி துவக்கியுள்ளது. இந்த புதிய நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்தாண்டு நவம்பர் 8ம் தேதி பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு தடை செய்தது. அதனைத் தொடர்ந்து ஆயிரம் ரூபாய் நோட்டுக்களுக்கு பதிலாக புதிதாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
எனினும், கடந்தாண்டு இறுதியிலும், ஜனவரி மாதத்திலும் கடுமையான சில்லறைப் பற்றாக்குறையால் பொது மக்கள் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில், 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதனை ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தாத போதிலும், தற்போது அதனை அச்சிடும் பணியை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய 200 ரூபாய் நோட்டுகளின் படம் எனக் கூறி வாட்ஸ் ஆப் உள்ளிட்டவைகளில் படம் வேகமாக பரவி வருகிறது.