செவ்வாய், 27 ஜூன், 2017

முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் நோன்பைக் குறிக்கும் விதமாக 20 ஆண்டுகளாகப் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த இரவு விருந்தை நடத்த தவறியதன் மூலம், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த பாரம்பரியத்தை உடைத்துள்ளார்.

ரமலான் வரவேற்பை நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை, வெளியுறவு துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் நிராகரித்துள்ளார்படத்தின் காப்புரிமைREUTERS
Image captionரமலான் வரவேற்பை நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை, வெளியுறவு துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் நிராகரித்துள்ளார்
அதிபர் கிளிண்டனின் பதவிக் காலத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் வெள்ளை மாளிகையில் ரமலான் விருந்து நடைபெற்று வந்திருக்கிறது.
முஸ்லிம்கள் குறிப்பிட்ட காலத்திற்கு நோன்பு இருந்து தொண்டு செய்தலுக்கு கவனம் செலுத்துவார்கள். ரமலான் மாத முடிவாக இந்த ஈத் அல் ஃபித்ர் விருந்து நடக்கிறது.
ரமலான் வரவேற்பை நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை, அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் நிராகரித்துள்ளார் என கூறப்படுகிறது.
ரமலான் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய, மதம் மற்றும் உலகளாவிய விவகாரங்களுக்கான வெளியுறவுத் துறையின் அலுவலகத்தில் இருந்து பரிந்துரைக்க டில்லர்சன் மறுத்துவிட்டார் என மே மாதம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியிருந்தது.
பாரம்பரியத்தை உடைத்த டிரம்ப்
பிரச்சாரத்தின் போது அமெரிக்க மசூதிகளைக் கண்காணிக்க வேண்டும் என கூறியது உட்பட, முஸ்லீம்-எதிர்ப்பு பிரசார தொனிக்காக அதிபர் டிரம்ப் இதற்கு முன்பிலிருந்தே விமர்சிக்கப்பட்டு வந்தார்.
டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் ``ஈத் திருநாளை கொண்டாடும் முஸ்லிம்களுக்கு ,அமெரிக்க மக்கள் சார்பாக நானும், மெலனியாவும் இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். `` நம்பிக்கை மற்றும் தொண்டு நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்தும் புனித மாதமான ரமலானின் போது, அமெரிக்காவில் உள்ள முஸ்லிம்கள் உலகெங்கிலும் உள்ளவர்களோடு இணைந்துகொள்வார்கள்.`` என்று கூறினார்.
2015- ஆம் ஆண்டில் அதிபர் பராக் ஒபாமா அளித்த `ஈத்` விருந்துபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image caption2015- ஆம் ஆண்டில் அதிபர் பராக் ஒபாமா அளித்த `ஈத்` விருந்து
``இந்த விடுமுறை நாட்களில், இரக்கம், கருணை மற்றும் நல்லெண்ணத்தின் முக்கியத்துவத்தை நினைவுபடுத்துகிறோம். முஸ்லிம்களின் மதிப்புகள் கௌரவிக்கும் விதமாக, உலகெங்கிலும் உள்ள முஸ்லீம்களுடன் அமெரிக்கா தனது பொறுப்புக்களைப் புதுப்பித்துக்கொள்ளும். ரமலான் வாழ்த்துக்கள்.`` என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
``ரமலானை கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் வாழ்த்துக்கள்`` என டில்லர்சன்னும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில், அதிபர் ஒருவர் நடத்திய முதல் இப்தார் இரவு விருந்து, 1805-ல் துனிசியா தூதருக்கு, அப்போதைய அமெரிக்க அதிபர் தாமஸ் ஜெபர்சன் நடத்தியதுதான் என்று கூறப்படுகிறது.
1996-ல் ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவின் முதல் பெண்மணியாக இருந்த போது, இப்தார் விருந்து மீண்டும் புத்துயிர் பெற்றது.
இது 1999-லிருந்து அமெரிக்க முஸ்லீம் தலைவர்கள், இராஜதந்திரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் ஒரு வருடாந்திர பாரம்பரியமாக நிகழ்வாக மாறியது
http://www.bbc.com/tamil/global-40410280?ocid=socialflow_facebook