வெள்ளி, 30 ஜூன், 2017

பலத்த பாதுகாப்பையும் மீறி புழல் சிறையில் இருந்து தப்பித்த ஆயுள் தண்டனை கைதி! June 30, 2017

பலத்த பாதுகாப்பையும் மீறி புழல் சிறையில் இருந்து தப்பித்த ஆயுள் தண்டனை கைதி!


சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வளசரவாக்கம் பகுதியில், கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில், குற்றவாளி ஜெயராஜ்-க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து  புழல் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். 

நேற்று சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் ஜெயராஜ் வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்தார். மாலை ஆறு மணிக்கு கைதிகளை கணக்கெடுத்த போது, ஜெயராஜ் தப்பியது தெரிய வந்தது. இதனையடுத்து தப்பியோடிய  ஜெயராஜை போலீசார் தேடி வருகின்றனர். 

பாதுகாப்பு கெடுபிடிகள், சிசிடிவி கேமராக்கள், துப்பாக்கி ஏந்திய போலீசார் என பலத்த பாதுகாப்பு மிகுந்த புழல் சிறையிலேயே ஆயுள் கைதி தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Related Posts: