வியாழன், 29 ஜூன், 2017

பொதுத்துறை நிறுவனமான “ஏர் இந்தியா”-வை தனியார் மயமாக்க முடிவு! June 29, 2017




ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு திருத்தங்களுடன் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள்.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை தனியார் மயமாக்க, கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. 

இதன்பிறகு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 34 திருத்தங்களுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், வரும் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 3 ஆயிரத்து 78 கோடி ரூபாய் கூடுதலாக செலவீனம் ஏற்படும் என்றும் அருண்ஜெட்லி தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி வீட்டு வாடகைப்படி உயர்வும் சில திருத்தங்களுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி மேலும் தெரிவித்தார்.