செவ்வாய், 27 ஜூன், 2017

இலவசங்களுக்கு அதிகம் செலவு செய்ததால் நிதிப்பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும் தமிழகம்! June 27, 2017

இலவசங்களுக்கு அதிகம் செலவு செய்ததால் நிதிப்பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும் தமிழகம்!


இலவசங்களை வழங்கியதால் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 8 மடங்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக இந்திய தொழில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மோசமான நிதி திட்டமிடல் மற்றும் வரிவசூல் காரணமாக தமிழ்நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டதாக தென்மண்டல இந்திய தொழிற் கூட்டமைப்பு தலைவர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

2016-17ம் ஆண்டில் உச்சபட்சமாக 15 ஆயிரத்து 850 கோடி ரூபாய் அளவில் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இலவசங்களை வழங்கியது, ரியல் எஸ்டேட் தொழில் தேக்கம், மோசமான வரி வசூல் காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை 885% அதிகரித்துள்ளதாகவும் இந்திய தொழில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

நிதி பற்றாக்குறையில் நாட்டில் உத்தரபிரதேசம், ராஜஸ்தானை தொடர்ந்து தமிழகம் 3வது இடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.