வியாழன், 29 ஜூன், 2017

ஜி.எஸ்.டி அறிமுக கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்பு குறித்து சோனியாகாந்தி இன்று முடிவு! June 29, 2017

ஜி.எஸ்.டி அறிமுக கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்பு குறித்து சோனியாகாந்தி இன்று முடிவு!


ஜிஎஸ்டி அறிமுக கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் பங்கேற்பதா அல்லது புறக்கணிப்பதா ? என்பது குறித்து, கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று முக்கிய முடிவு எடுக்கவுள்ளார். 

ஜிஎஸ்டி மசோதாவை அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு என்பதால், இதில் கலந்து கொள்ள வேண்டும் என கட்சியில் ஒரு பிரிவினர் கருதுவதாகக் கூறப்படுகிறது. எனினும், ஜிஎஸ்டி மசோதாவில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக காங்கிரஸ் கட்சி அளித்த பல்வேறு பரிந்துரைகள் ஏற்கப்படாததால், விழாவை புறக்கணிக்க வேண்டும் என  மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஆலோசித்து, கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று முடிவு அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே, ஜிஎஸ்டி அறிமுக கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்து விட்டார். ஜிஎஸ்டி மசோதாவுக்கு தொடக்கம் முதல் ஆதரவு தெரிவித்து வந்தாலும், அதை நடைமுறைப்படுத்தும் மத்திய அரசின் வழிமுறை ஏற்கத்தக்கதாக இல்லை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.