வியாழன், 29 ஜூன், 2017

ஃபேஸ்புக்கை முந்திய வாட்ஸ் அப்! June 28, 2017

ஃபேஸ்புக்கை முந்திய வாட்ஸ் அப்!


சர்வதேச அளவில் பல நாடுகளில் செய்திகளை தெரிந்து கொள்ள மக்கள் வாட்ஸ் அப் செயலியை அதிகமாக பயன்படுத்துகின்றனர் என்ற தகவல் ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் இதழியல் மாணவர்களை வைத்து 36 நாடுகளில் 71,805 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களை விட வாட்ஸ் அப் மூலமே மக்கள் செய்திகளை பார்த்து தெரிந்து கொள்கின்றனர் என தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் ஃபேஸ்புக்  மூலமே பெரும்பாலான மக்கள் செய்திகளை தெரிந்துகொள்வதாக பலர் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் பலர் வாட்ஸ் அப் மூலமே செய்திகளை தெரிந்து கொள்வதாக கருத்து தெரிவித்துள்ளனர். 

மலேசியாவில் 51 சதவீதம் மக்களும், பிரேசிலில் 46 சதவீதம் மக்களும், செலி நாட்டில் 39 சதவீதம் மக்களும், சிங்கப்பூரில் 38 சதவீதம் மக்களும், ஹாங்காங்கில் 36 சதவீதம் மக்களும், ஸ்பெயினில் 32 சதவீதம் மக்களும், துருக்கி நாட்டில் 25 சதவீதம் மக்களும் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் அப்பை பயன் படுத்துகின்றனர். 

செய்திகளையும் நாட்டு நடப்புகளையும் தெரிந்து கொள்ள ஃபேஸ்புக்கையே பலர் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது வாட்ஸ் அப்பை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.