புதிதாக தேசிய கல்விக் கொள்கையை வரையறுக்க முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டங்களை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து புதிய தேசிய கல்விக் கொள்கையை வரையறுக்க விஞ்ஞானி கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை மத்திய மனித வள மேம்பாட்டு துறை அறிவித்துள்ளது.
இக்குழுவில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கே.ஜே.அல்போன்ஸ், வேளாண் நிபுணர் ராம் ஷங்கர் குரீல், கணிதத்துறை நிபுணர் மஞ்சுள் பர்கவா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளதாகவும் மனிதவள மேம்பாட்டு துறை அறிவித்துள்ளது.
இந்த குழு நாட்டின் பன்முகத்தன்மை, வளர்ச்சி மற்றும் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு புதிய கல்விக் கொள்கையை வகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.