வியாழன், 29 ஜூன், 2017

சாலை ஓரத்தில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் சிறுநீர் கழித்த மத்திய அமைச்சர்! June 29, 2017

சாலை ஓரத்தில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் சிறுநீர் கழித்த மத்திய அமைச்சர்!


மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் சாலையோரமாக வண்டியுடன் பாதுகாப்பு அதிகாரிகளை நிறுத்தி வைத்துவிட்டு சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி சார்பில் (ஆர்.ஜே.டி) இன்று (29-06-2017) அவர்களுடைய  ட்விட்டர் பக்கத்தில், மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங், பொது இடத்தில் சாலையோரமாக நின்று சிறுநீர் கழிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு “தூய்மை இந்தியா” (Swatch Bharat) இப்போது எங்கே போனது என கேள்வி எழுப்பி ட்வீட் செய்துள்ளது.

சமூக வலைதளங்களில் வைரக்லாக பரவிவரும் இந்த படங்கள்
பீகாரில் மோதிஹாரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்தியில் கடந்த 2014ம் ஆண்டு பாஜக அரசு பதவியேற்றப்போது தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மேலும் கடந்த பட்ஜெட் தொடரின் போது தூய்மை இந்தியா திட்டத்திற்கு மத்திய அரசு பல கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது என்பது குறிபிடத்தக்கது. 

Related Posts: