புதன், 28 ஜூன், 2017

குடியரசுத் தலைவர் தேர்தலில் களமிறங்கும் மீராகுமார் இன்று வேட்புமனு தாக்கல்! June 28, 2017

குடியரசுத் தலைவர் தேர்தலில் களமிறங்கும் மீராகுமார் இன்று வேட்புமனு தாக்கல்!


குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் களமிறங்கும் மீராகுமார் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பீகார் முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 23-ம் தேதி ராம்நாத் கோவிந்த் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மீராகுமார் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். 

டெல்லியில் நடைபெறும் இந்த நிகழ்வில் பங்கேற்க, காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், இடதுசாரிகள் உள்பட 17 கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதில் திமுக சார்பில் எம்பி கனிமொழி கலந்து கொள்கிறார். இந்நிலையில் மீராகுமார், ஜூலை முதல் வாரத்தில் சென்னை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது திமுக தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோருகிறார். 

மேலும் முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து மீரா குமார் ஆதரவு கோருவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.