செவ்வாய், 27 ஜூன், 2017

MBBS, BDS மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகம்! June 27, 2017

MBBS, BDS மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகம்!


MBBS, BDS மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 

2017-18-ம் கல்வியாண்டு மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 7-ம் தேதி நடைபெற்றது. அதை தொடர்ந்து, கடந்த 23-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. இதனையடுத்து, அரசு மற்றும் சுயநிதி மருத்துவம், மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள 21 மாவட்ட அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் சென்னை அரசு பல் மருத்துவமனை என மொத்தம் 22 இடங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் எனவும், இன்று காலை 10 முதல் ஜூலை 7-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. 

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 8-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் எனவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான பொது விண்ணப்ப கட்டணம் 500 ரூபாயும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜுலை 17 ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.