வியாழன், 29 ஜூன், 2017

அமெரிக்கா விதித்தத் தடையில் சிறிது தளர்வு! June 29, 2017




சிரியா,லிபியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய தடை வதித்து ஏற்கனவே டிரம்ப் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது தடைகள் சிறிது தளர்த்தப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரான், ஈராக், சிரியா உள்ளிட்ட ஆறு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள், அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்து உத்தரவிட்டார். இதற்கு, உலகம் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் எழுந்தன. பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.  இதையடுத்து, தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. 

இதில், ட்ரம்ப்பின் தடை உத்தரவுக்குச் சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டது.   இந்நிலையில், தற்போது இந்த விதிமுறையில்  தளர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிரியா,லிபியா உள்ளிட்ட 6 நாடுகளின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் தொழில் தொடர்புடையவர்களுக்கு விசா  கிடைக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.