செவ்வாய், 20 ஜூன், 2017

ஆம்புலன்ஸ் சேவையைப் பெற இனி ஆதார் அவசியம்! June 20, 2017

உத்தரபிரதேச மாநிலத்தில் இலவச ஆம்புலன்ஸ் சேவை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

அவசர உதவிக்காக ஆம்புலன்ஸை அழைப்பவர்கள் தங்களது ஆதார் எண்ணை அளித்தால் மட்டுமே ஆம்புலன்ஸ் அந்த இடத்திற்கு செல்லும் என கூறியுள்ள உத்தர பிரதேச அரசு, நோயாளிகளை ஏற்றிக் கொண்டு வருவதாக சொல்லி பல ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஏமாற்றுவதால் இம்முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே உத்தரபிரதேசத்தில் ஆம்புலன்ஸ் சேவையை மக்கள் பெறுவது சிக்கலாகி இருக்கும் நிலையில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ஆம்புலன்ஸ் சேவையை பெறுவதை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது. ஆதார் அட்டை இன்னும் அனைத்து மக்களையும் சென்றடையாத நிலையில் அரசின் இம்முடிவால் ஆதார் அட்டை இல்லாதவர்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளனர். விபத்து நேரும் போதோ அவசரத்திற்கோ ஆம்புலன்சை அழைக்கும்போது கையில் ஆதார் அட்டை இருக்க வேண்டும் என்பது சாத்தியமில்லாதது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts: