Home »
» ஆசிரியரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை! June 29, 2017
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் ஆசிரியரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவிநாசியை அடுத்த அ.குரும்பபாளையம் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நான்காம் வகுப்பு ஆசிரியராக அவிநாசியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பணியாற்றிவருகிறார். இவர் தனது வகுப்புகளின் போது, பெண் குழந்தைகளிடம் வரம்பு மீறி பாலியல் தீண்டுதல் மற்றும் பாலியல் தொல்லைகள் கொடுத்துவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விபரம் அறிந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சேயூர் போலீசார் பொதுமக்களை சமரசம் செய்து, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். அரசு பள்ளி ஆசிரியர் பெண் குழந்தைகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related Posts:
காவிமன்றங்களாக மாறிவரும் இந்திய நீதிமன்றங்கள்* *சகோ P.ஜெய்னுலாப்தீன்*
source: https://www.facebook.com/JeddahTNTJ/videos/vb.189986381143439/761227080686030/?type=2&theater… Read More
ஒலிம்பிக்கில் வரலாற்றில் ஹிஜாபுடன் களம் காணும் முதல் அமெரிக்க பெண்மணி
Source: #இப்திஹாஜ்_முஹம்மத்
… Read More
குஜராத் தலித் மக்களின் எழுச்சிக்கு காரணமானவர்.
#ஹர்தீப் பட்டேலை தெறிந்த நம்மில் எத்தனை பேருக்கு#ஜெக்னேஸ் மேவானியை தெறியும்?
ஆம் இவர் தான் இன்றய குஜராத் தலித் மக்களின் எழுச்சிக்கு… Read More
நீரிழிவை கட்டுப்படுத்தும் ஆவாரை - இயற்கை மருத்துவம்
இயற்கை நமக்கு அளித்த மூலிகைகளில் ஆவாரை மூலிகையை பற்றி அறியாத மக்களே இல்லை.
ஆவாரை பளிச்சிடும் தங்க மஞ்சள் நிறமான, கொத்தான பூக்களை உடைய தாவரம், ம… Read More
சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி, புளி, துளசி, பேரிக்காய், கேரட், நன்னாரி,
சோற்றுக்கற்றாழை, சோம்பு, சுரைக்காய், பூசணிக்காய், விளாம்பழம், அமுக்கிராகிழங்கு, கரிசலாங்கண்ணி கீரை மற்றும் கீழாநல்லி இவையனைத்தும் எளிமையாக கிடைக்க… Read More