வியாழன், 29 ஜூன், 2017

அசாமில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி ஒரு லட்சம் பேர் பாதிப்பு! June 28, 2017




அசாமில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி, அந்த மாநிலத்தின் 8 மாவட்டத்தை சேர்ந்த ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தொடர் மழை காரணமாக அசாமிலுள்ள 5 ஆறுகள் அபாய கட்டத்தை தாண்டியுள்ளன. கடந்த 2 நாட்களாக மழையின் தாக்கம் குறைந்திருந்தாலும் வெள்ளம் வடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். 

வெள்ளத்தின் தாக்கத்தால் 1380 ஏக்கள் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் மூழ்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 150 கிராமங்களை சேர்ந்த மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதனிடையே மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் மாநில அரசு சுணக்கம் காட்டி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Posts: