வெள்ளி, 30 ஜூன், 2017

விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம்! June 30, 2017

விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!


விசைத்தறி துணிகளுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி, இன்று முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளதாக, திருச்செங்கோடு வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.  

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இவற்றின் மூலம் உற்பத்தியாகும் துணிகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பால் விசைத்தறி தொழில் முடங்கும் அபாயம் உள்ளதாக, விசைத்தறி தொழிலாளர்கள் கூறியுள்ளனர். 

இதனிடையே, இந்த வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி, திருச்செங்கோடு வட்டார சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், இன்று முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த போராட்டத்தால் சுமார் 30 கோடி ரூபாய் அளவுக்கான வர்த்தகம் பாதிக்கும் என, திருச்செங்கோடு வட்டார சிறு விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.