நெல்லை மாவட்டம் கூடன்குளம் அணுமின் நிலையத்தில் 3-வது அணு உலையில் 2023-லிலும், 4-ஆவது உலையில் 2024-ஆம் ஆண்டும் மின் உற்பத்தி தொடங்குமென அணுசக்தி கழக இயக்குநர் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் திறன் கொண்ட இரு அணு உலைகள் இயங்கிவருகின்றன. இதனிடையே, 3 மற்றும் 4-ஆவது அணு உலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கடந்த ஜனவரி மாதம் இந்தியா, ரஷ்யா இடையே கையெழுத்தானது. இந்நிலையில், 3 மற்றும் 4-ஆம் உலைகளுக்கான அடித்தள கான்கிரீட் அமைக்கும் பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அணுசக்தி கழகத் தலைவர் எஸ்.கே.சர்மா, அணுசக்தி கழக இயக்குநர் பானர்ஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்