வியாழன், 29 ஜூன், 2017

இன்று அறிவிக்கப்படுகிறது குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் தேதி! June 29, 2017

இன்று அறிவிக்கப்படுகிறது குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் தேதி!


குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

தற்போதைய துணை குடியரசுத் தலைவரான ஹமீத் அன்சாரியின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. குடியரசுத் துணைத் தலைவர், மாநிலங்களவை தலைவராகவும் செயல்படக் கூடியவர். எனவே, புதிய குடியரசுத் துணைத் தலைவர் பதவி மிகந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 

குடியரசுத் துணைத் தலைவரை, மக்களவை மற்றும் மாநிலங்களவை உறப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள். இரு அவைகளின் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 790 என்ற போதிலும், ஒரு சில இடங்கள் காலியாக உள்ளன. கோவா மாநிலத்திற்கான மாநிலங்களவை உறுப்பினருக்கானத் தேர்தல் தேதியை, தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. 

இம்மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாந்தாராம் நாயக்கின் பதவிக் காலம் ஜூலை 28ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், ஜூலை 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.