வெள்ளி, 30 ஜூன், 2017

தமிழச்சி கிளப்பிய அதிரவைக்கும் சர்ச்சை… ஜெயலலிதா அப்போலோவில் இருந்த போது, அமைச்சர் விஜய பாஸ்கரால் தா


ஜெயலலிதா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதலே பல பகீரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர் முகநூலில் தமிழச்சி என்ற பெயரில் பக்கம் கொண்ட பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்ற பெண்.
கடந்த சில நாட்களாக எந்தவிதமான கருத்துகளையும் வெளியிடாமல் இருந்தவர். தற்போது திடீரென பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அவர் முகநூலில் பதிவிட்ட பதிவில் இருந்த தகவல்கள்,
வருமான வரித்துறை 3 முக்கிய நபர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை வைத்திருக்கிறது.
போதை பொருட்களடங்கிய தடை செய்யப்பட்ட பொருளை விற்பனை செய்வதற்காக இலஞ்சம் பெற்றவர்கள்:
1. அமைச்சர் விஜயபாஸ்கர்.
2. சென்னை முன்னால் கமிஷனர் ஜார்ஜ்.
3. தற்போதைய கமிஷனர் டி.கே.ராஜேந்திரன்
இதே மூன்று பேரும் இணைந்து தான் சுவாதி, ராம்குமார், ஜெயலலிதா படுகொலை வரை கூட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டார்கள்.
குட்கா ஊழலில், 1.4 கோடி இலஞ்சம் டி.கே.ராஜேந்திரன் வாங்கியுள்ளதாக வருமான வரித்துறை கூறுகிறது.
ராம்குமாரை குற்றவாளியாக்கி சிறைக்குள் அவனை சாகடிக்கும் வரை ஆர்.எஸ்.எஸ்க்கு எடுபிடி வேளை பார்த்த டி.கே. ராஜேந்திரன் அதற்காக எவ்வளவு தொகை பெற்றார்?
ஜெயலலிதா அப்போலோ மருத்துவனைக்குள் கொண்டு செல்வதற்குள் அங்கிருந்த வீடியோ கேமராக்களை கழற்றச் சொல்லி உத்தரவு போட்ட டி.கே ராஜேந்திரன் யார் சொல்லி அதை செய்தார்? அதற்காக அவர் பெற்றுக் கொண்ட தொகை எவ்வளவு?
ஜெயலலிதா ஆம்புலன்ஸ் வந்த வீடியோ காட்சிகள் அப்போலோவிலும் போயஸ்கார்டனிலும் நீக்கப்பட்டுள்ளன.
உளவுத்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த டி.கே ராஜேந்திரன் அத்தனை ஆதாரங்களையும் அழிப்பதற்கு யாரிடம் இருந்து எவ்வளவு தொகை பெற்றார்?
ஜெயலலிதா அப்போலோவில் இருந்த போது அதன் முழுபொறுப்பும் சுகாதாரத்துறையைச் சார்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர் கட்டுப்பாட்டில் இருந்ததோடு, மோடி அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் உடந்தையாகவும் இருந்தார்.
‘எடுபிடிக்கு எடுப்பிடி’ என்று செயல்பட்ட இந்த மூன்று எடுப்பிடி கூட்டாளிகளையும் எதற்காக வருமான வரித்துறை மூலமாக மாட்ட வைத்திருக்கிறது மோடி அரசு?
அரசியல்வாதிகள் தங்கள் இரகசியங்களை தெரிந்து வைத்துள்ள எடுபிடிகள் அடியாட்களை உயிரோடு வைத்திருப்பதில்லை. இது அரசியல்வாதிகளின் கள்ள பண்புகளில் ஒன்று.
என்று தனது முக நூல் பதில் குறிப்பிட்டு இருக்கிறார்.
http://newstig.com/news/46793/bribe-to-minister-and-top-cops-by-gutkha-dealers