நீதித்துறையில் லஞ்சம் இருக்கக் கூடாது என மக்களுக்காக வாதாடி இறுதியில் தோற்று விட்டேன் - நீதிபதி கர்ணன் உருக்கம்!
கைது பின்னணி
> நீதிபதிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு தீர்ப்பு அளிப்பதாக பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு நீதிபதி கர்ணன் புகார் கடிதம் எழுதினார்.
> இது குறித்து விசாரனை நடத்துவதற்கு பதிலாக உச்ச நீதிமன்றம் இதற்காக தாமாக முன் வந்து உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டது.
> உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்றத்தின் மூன் விசாரனைக்கு ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
> உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம் தனிப்பட்ட முறையில் இது தொடர்பாக விளக்கம் அளிப்பதாக கர்ணன் கூறினார்.
> அதை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.
> உச்ச நீதிமன்றம் கர்ணனுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்தது
> பதிலுக்கு கர்ணன் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்தார்.
> இறுதியில் உச்ச நீதிமன்றம் கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது.
> தற்போது கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
> பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்த வந்த கர்ணன் தமிழகத்தை சேர்ந்தவர்.
> கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நீதிபதி கர்ணன் ஓய்வு பெற்றார்.