டெல்லி போலீஸ் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு SDPI போராட்டம்
12 பேர் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு.
#மீடியாவால்_மறைக்கப்பட்ட துரோகம்.
டெல்லி சோனியா விகார் பகுதியில் கட்டப்பட்டு வந்த பள்ளிவாசலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி, டெல்லி போலீஸ் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு SDPI கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
டெல்லி சோனியா விகார் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த பகுதி மக்களுக்கு தொழுகைக்காக பள்ளிவாசல் இல்லாத நிலையில், வக்புக்கு சொந்தமான இடத்தில் புதிதாக பள்ளிவாசல் கட்டும் பணி நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் 8ம் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட சங்க்பரிவார் அமைப்பினர் ஒன்று திரண்டு கட்டப்பட்டு வந்த அந்த பள்ளிவாசலை இடித்து தள்ளினர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். நாட்டின் தலைநகரில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளிவராமல் மறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை கோரி SDPI கட்சி சார்பாக இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கலவர கும்பலுக்கு தலைமை வகித்ததாக கூறி 12 பேர் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளது.