சனி, 17 ஜூன், 2017

அதிகரிக்கும் மொபைல் டேட்டா தினசரி பயன்பாடு June 17, 2017

அதிகரிக்கும் மொபைல் டேட்டா தினசரி பயன்பாடு


'டிஜிட்டல்' இந்தியாவில் நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒரு புறமிருக்க தினசரி மொபைல் டேட்டா பயன்பாடும் மிக வேகமாக அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்பெல்லாம் மின்சாரக் கட்டணம் உள்பட அரசு அலுவலகங்களுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களைக் கட்டுவதற்கு நமது நேரமும் உழைப்பும் வீணாகும். நீண்ட வரிசைகளில் காத்துக் கிடப்போம். தற்போது உட்கார்ந்த இடத்திலிருந்தே ஆன்லைனில் பணத்தை ஒரு கிளிக்கில் அனுப்பிவிட்டு வேறு வேலையைப் பார்க்கிறார்கள். 

உலகளவில் இணையத்தில் இணைக்கப்பட்ட சாதனங்களின் எண்ணிக்கை 2011-ம் ஆண்டிலேயே சுமார் 1,250 கோடியைத் தாண்டிவிட்டது. உலகில் உள்ள மனிதர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை விட இது அதிகம். இது இன்னும் ஐந்து வருடத்துக்குள் இரு மடங்கு முதல் நான்கு மடங்கு வரை மேலும் அதிகரிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்தையும் இணைத்துப் பிணைத்து இணையம் தொடர்ந்து மேலும் மேலும் விரிந்து வருகிறது.

அதிகரிக்கும் மொபைல் டேட்டா பயன்பாடு

➤2022-ல் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் தினசரி 11 GB மொபைல் டேட்டா பயன்படுத்துவார்கள்

➤தற்போது அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 500 MB முதல் 1 GB வரை டேட்டா பயன்படுத்தி வருகிறார்கள் 

➤ஒவ்வொரு ஆண்டும் மொபைல் டேட்டா பயன்பாடு 40% அதிகரிக்க வாய்ப்பு

➤இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 30 கோடிக்கு மேல்

➤ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் மொபைல் டேட்டாவை வீடியோ கால்கள், live stream சேவைக்காக அதிக பயன்படுத்துவதாக தகவல் 

➤பேஸ்புக், Instagram போன்ற வலைதளங்களில் வீடியோ பகிர்வுகள் அதிகம் உள்ளதால் இந்த டேட்டா பயன்பாடு அதிகரிக்கிறது.

Related Posts: