சனி, 24 ஜூன், 2017

மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு! June 24, 2017

மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு!


மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 17ம் தேதி தொடங்குவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 17ம் தேதி தொடங்குவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதற்கான விண்ணப்ப விநியோகம் வரும் 27ம் தேதி முதல் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 7ம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வினை, நாடு முழுவதிலும் 11 லட்சத்து 38 ஆயிரத்து 890 மாணவர்கள் எழுதியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Posts: