அருணாச்சல பிரதேசத்தில் 3 வீரர்களுடன் மாயமான இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் பரவலாக மழைபெய்து வருகிறது. இதனையடுத்து விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலமாக மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நேற்று மாலை 4 மணியளவில் தகவல் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை இடாநகர் பிரிவு விமானப்படை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, அருணாச்சல பிரதேச மாநிலம் பாபம் பரே மாவட்டத்தில் விழா ஒன்றில் பங்கேற்க சென்ற மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ சென்ற ஹெலிகாப்டர் வானிலை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று 3 வீரர்களுடன் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், ஹெலிகாப்டரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.