மேற்கு வங்க ஆளுநர் கேசரி நாத் திரிபாதி, அச்சுறுத்தும் வகையில் பேசியதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கொல்கத்தாவில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து தன்னிடம் தொலைபேசியில் ஆளுநர் கேசரி நாத் திரிபாதி பேசியதாக மம்தா பானர்ஜி குறிப்பிட்டார். அப்போது பாரதிய ஜனதா கட்சியின் உள்ளூர் தலைவர் போன்றும், அச்சுறுத்தும் தொனியிலும் ஆளுநர் பேசியதாக மம்தா பானர்ஜி கூறினார்.
அவரது பேச்சு, அவமதிக்கப்பட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தியதாகவும், அவ்வாறு பேசக் கூடாது என ஆளுநரிடம் தான் கூறியதாகவும், மம்தா பானர்ஜி தெரிவித்தார். முதலமைச்சர் பதவியில் இருந்து வெளியேறும் சூழல் வந்து விட்டதோ என்ற எண்ணத்தை ஆளுநரின் பேச்சு ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்ட மம்தா பானர்ஜி, யாருடைய கருணையாலும் தான் முதலமைச்சராக இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல என்பதையும், நியமிக்கப்பட்டவர் தான் என்பதையும் ஆளுநர் உணர வேண்டும் எனவும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.