புதன், 5 ஜூலை, 2017

இந்தியா - சீனா இடையே போர் மூளும் அபாயம் July 05, 2017




சிக்கிம் எல்லை பிரச்னையில் சமரசத்துக்கு இடமே இல்லை என சீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால், இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகள் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது.

இந்தியாவுக்கு சொந்தமான சிக்கிம், அருணாச்சல பிரதேசம் எல்லை பகுதியில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், சிக்கிம் மாநில எல்லைக்குள் சீன ராணுவம் அண்மையில் ஊடுருவி இந்திய ராணுவத்தின் 2 பதுங்கு குழிகளை அழித்தது. மேலும் பூடான் பகுதியை ஆக்கிரமிக்கும் வகையில் அங்கு சாலை அமைத்து வருகிறது. 

இதற்கு பதில் நடவடிக்கையாக, சிக்கிம் எல்லையில் இந்திய ராணுவம் படைகளை குவித்துள்ளது, பதிலுக்கு சீனாவும் துருப்புகளை குவித்துள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் சுஹாங், தற்போது சீன எல்லைக்குள் இந்திய வீரர்கள் ஊடுருவியுள்ளதாக கூறினார். 

எல்லையில் குவிக்கப்பட்டிருக்கும் இந்திய படைகளை உடனடியாக வாபஸ் பெறும் விவகாரத்தில், சமரசத்துக்கு இடமே இல்லை என சுஹாங் கூறினார். எல்லையில் ஏற்பட்டுளள பதற்றத்தால், இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் உருவாகி இருப்பதாக இருநாட்டு பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts: