செவ்வாய், 4 ஜூலை, 2017

மார்க்கத்தை தூய முறையில் சொல்லாமல் தனது சுய லாபத்திற்க்காக சொல்லும் ஆலிம்ஷாக்கள் இருப்பதால்தான் இது போன்ற சம்பவங்கள்

ரொம்ப கவலையா இருக்கு .,அல்லாஹ் பாதுகாப்பானாக.சமீபத்தில் நடந்து முடிந்த ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் துவக்க நாட்களுக்கு முன் சுன்னத் ஜமாஅத் ஆலிம்கள் வீடுவீடாக சென்று நமைச் சார்ந்த யாரும் ஷிர்க் செய்யவில்லை.,இவர்களாக புதிதாக ஷிர்க் என்ற ஒன்றை கூறி மக்களை குழப்புகின்றார்கள்.,எனவே யாரும் மாநாட்டிற்க்கும் செல்ல வேண்டாம் அவர்கள் சொல்வதை கேட்கவும் வேண்டாம் என்று பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்.அப்போது ஒரு சகோதரர் வீட்டிற்க்குச் சென்று தங்களது கருத்தை வலியுறுத்த அவர் தன் வீட்டின் அருகே வசிக்கும் பெண் வருடா வருடம் வீரபாண்டி அம்மன் கோவிலுக்கு தீச்சட்டி எடுக்கிறாளே அது ஷிர்க் இல்லையா ஹஜரத் (கள்) என்று அவள் வீட்டை சுட்டிகாட்டி கேட்க..,! இது போன்ற விஷயங்களை சுமூகமான முறையில் தான் சுட்டிகாட்டி திருத்த வேண்டும். இதை மனதில் வைத்துக் கொண்டு நீங்கள் மாநாட்டிற்க்கு சென்று விடாதீர்கள்.நமது மக்கள் ஷிர்க் செய்ய மாட்டார்கள் என்று மீண்டும் கூறிவிட்டு சென்றார்களாம் போலிமூசாக்கள்.மார்க்கத்தை தூய முறையில் சொல்லாமல் தனது சுய லாபத்திற்க்காக சொல்லும் ஆலிம்ஷாக்கள் இருப்பதால்தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.

Related Posts: