செவ்வாய், 4 ஜூலை, 2017

தமிழகம் உட்பட 22 மாநில எல்லைகளில் சுங்கச்சாவடிகள் அகற்றம் July 04, 2017




ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு அமலபடுத்தப்பட்டதையடுத்து 22 மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன.

ஒரு தேசம், ஒரே வரி என்ற கொள்கை அடிப்படையில் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் ஒரே வரி சட்டம் அமல்படுத்தப்பட்டு 3 நாட்கள் ஆனநிலையில் மாநிலங்களின் எல்லையில் சுங்கச்சாவடிகளில் வரி வசூலிக்கும் முறை ஒழிக்கப்பட்டது. 

இதனால் நாடு முழுவதும் 22 மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் உள்ள  சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டன. இதற்கு முன் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்ல அந்த சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது இரு மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டதன் மூலம் வாகனங்கள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு எளிதில் நுழையும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

Related Posts: