ஞாயிறு, 2 ஜூலை, 2017

மக்களை வாக்களிக்க நிர்பந்திக்க முடியாது: நஜிம் ஜைதி July 02, 2017

மக்களை வாக்களிக்க நிர்பந்திக்க முடியாது: நஜிம் ஜைதி


அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் தேர்தலில் கட்டாய வாக்களிக்கும் முறை சாத்தியமில்லாத ஒன்று என தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்த அவர், வாக்களிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நாடுகளில், இந்தியாவும் ஒன்று என குறிப்பிட்டார். கட்டாய வாக்களிப்பு முறை, நம்நாட்டில் வாக்களிப்போரின் எண்ணிக்கையை உயர்த்துமே தவிர,  அதனை முழு அளவில் செயல்படுத்துவது கடினம் எனவும் அவர் கூறினார். 

இந்தியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகையே, இதற்கு காரணம் என்று தெரிவித்த நஜீம் ஜைதி, சிறிய மக்கள் தொகை  கொண்ட நாடுகளில் இது சாத்தியம் என்றும் கூறினார். வாக்களிக்க வருமாறு மக்களை, தேர்தல் ஆணையத்தால் நிர்பந்திக்க முடியாது என குறிப்பிட்ட அவர், அரசியலமைப்பு அளித்துள்ள அதிகாரத்தின்படி, வாக்களிப்பதும், வாக்களிக்காததும் அவரவர் உரிமை என்றும் தெரிவித்தார்.

Related Posts: