தென்கொரிய பெண்களை ஜப்பான் ராணுவத்தினர் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தியது தொடர்பாக மிக அரிதான காட்சி ஒன்றை சியோல் நகர நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போர் நடந்த போது தென்கொரியாவைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களை ஜப்பான் ராணுவத்தினர் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தியதாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாகவே இருநாடுகளுக்கும் இடையே புதிய உறவுகளுக்கான வாய்ப்புக்கள் எழவில்லை. இந்த விஷயத்தில் தென்கொரிய அரசு சமாதானமாகப் போனாலும், அடிக்கடி போராட்டம் நடத்தும் மக்களை சமாதானப்படுத்தும் வழிகள் இதுவரை கண்டறியப்படவில்லை.
இதற்கிடையே பாலியல் அடிமைகளாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்காக ஒரு நிதியம் மூலம் பல்வேறு உதவிகளை அளிப்பதாக கடந்த ஓராண்டுக்கு முன் ஜப்பான் அரசு அறிவித்தது. ஆனால், இந்த விஷயத்தில் ஜப்பான் மன்னிப்பு கேட்கவேண்டும் என மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜப்பான் ராணுவத்தினரால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் அமெரிக்கா மற்றும் சீனக் கூட்டு ராணுவத்தினர் விசாரணை நடத்திய காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை சியோல் நகர நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மனித உரிமை தொடர்பாக தென்கொரிய ஆராய்ச்சியாளர் குழு இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வுப் பணிகளின் போது இந்த வீடியோவை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.