வெள்ளி, 7 ஜூலை, 2017

ஜல்லிக்கட்டு சட்டத் திருத்தத்திற்கு எதிராக பீட்டா மனு தாக்கல்! July 07, 2017

ஜல்லிக்கட்டு சட்டத் திருத்தத்திற்கு எதிராக பீட்டா மனு தாக்கல்!


ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 2-வது முறையாக பீட்டா அமைப்பு மனுத்தாக்கல் செய்துள்ளது.

மேலும் இந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளைகள் துன்புறுத்தப்பட்டதாக ஆய்வில் தெரிய வந்திருப்பதாகவும், அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களையும் உச்ச நீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு தாக்கல் செய்துள்ளது.

விதிமுறைகளை மீறி இந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது 5 காளைகள் இறந்துள்ளதாகவும், 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்த மனுவில் பீட்டா அமைப்பு குறிப்பிட்டுள்ளது. தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட திருத்தத்திற்கு எதிராக பீட்டா ஏற்கெனவே தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டத்  திருத்தத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Posts: