சனி, 8 ஜூலை, 2017

சென்னையில் இருவழித்தடங்களில் மோனோ ரயில் இயக்க திட்டம்! July 08, 2017




சென்னையில் பொதுப் போக்குவரத்தை உயர்த்துவதற்காகவும், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் மோனோ ரயில் தடம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இன்று சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை கொள்கை விளக்கக்குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக ரூபாய் 6 ஆயிரத்து 4025 கோடி மதிப்பீட்டில், இருவழித்தடங்களில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போரூர்-கத்திப்பாரா, போரூர்-வடபழனி இடையேயான 20.68 கிலோமீட்டர் தூரத்திற்கு 3,267 கோடி திட்ட மதிப்பீட்டில் முதல்வழித்தடமும், வண்டலூர் முதல் வேளச்சேரி இடையேயான 22.80 கிலோமீட்டர் தூரத்திற்கு 3,135 கோடி மதிப்பீட்டில் இரண்டாவது வழித்தடமும் அமைக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts: