ஞாயிறு, 9 ஜூலை, 2017

ஆச்சார - வைதீக வழக்கங்களே நான் சந்தித்த துரோகங்கள்!” July 09, 2017

“ஆச்சார - வைதீக வழக்கங்களே நான் சந்தித்த துரோகங்கள்!”


நான் ஒரு மேட்டுக்குடி தலித் ஆக அடையாளப்படுத்தப்படுவதை விரும்பவில்லை என எதிர்க்கட்சிகளின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் மீரா குமார் தெரிவித்துள்ளார்.

ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கருத்து தெரிவித்துள்ள மீரா குமார், தன்னை அப்படி அடையாளப்படுத்துவது, மக்களின் நம்பிக்கையை அழித்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், ‘நான் ஒரு சித்தாந்தத்தை முன்னிறுத்தி நிற்கிறேன்’ என்றும், ‘இது ஒரு சித்தாந்த போர்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது நாட்டில் நடப்பவை மிக மோசமானதாக இருக்கின்றன என்றும், 21ம் நூற்றாண்டில் இந்தியா எங்கு வந்து நிற்கிறது என்பது கவலையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், அன்பு மற்றும் அமைதி ஆகிய இரண்டும் தான் நான் கொடுக்க நினைப்பவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். நீங்கள் சந்தித்த நண்பர்களிடம் சந்தித்த துரோகம் பற்றி கூறுங்கள் என்ற கேள்விக்கு, ஆச்சார - வைதீக வழக்கங்கள் தான் நான் சந்தித்த துரோகம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts: