புதன், 12 ஜூலை, 2017

​புகழ்பெற்ற தடயவியல் நிபுணர் சந்திரசேகரன் காலமானார்! July 12, 2017

​புகழ்பெற்ற தடயவியல் நிபுணர் சந்திரசேகரன் காலமானார்!


புகழ்பெற்ற தடயவியல் நிபுணர் சந்திரசேகரன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

அவருக்கு வயது 83. பத்மபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற இவர், ரத்த நோய் தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த ஒரு மாதகாலமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 2 மணி அளவில் உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலம், சென்னை சின்னமலையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து இன்று மாலை 3 மணிக்குப் புறப்பட்டு, மந்தைவெளி செயின்ட் மேரிஸ் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்படும் என சந்திரசேகரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

Related Posts: