தென் மேற்குப் பருவமழை கைவிரித்ததால் தமிழகம் மற்றும் கேரளப் பகுதிகளில் மழை வெகுவாக குறைந்துவிட்டது. அதனால், நீர்வரத்து வெகுவாகக் குறைந்து குற்றால அருவிகளில் தண்ணீர் மிகவும் குறைவாகவே விழுகிறது.
குற்றாலம் மெயின் அருவியில் பாறையை ஒட்டியபடி தண்ணீர் விழுகிறது. இதனால், அதில் குளிக்க நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
கடந்தவாரத்தில் தண்ணீர் வரத்து அதிகம் இருந்ததால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகம் அடைந்து அதிக அளவில் வரத்தொடங்கினர். சில நாட்களில் நீர்வரத்து குறைந்துள்ளதால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.