புதன், 12 ஜூலை, 2017

வனப்பகுதிக்குள் அத்துமீறி சென்ற சுற்றுலா பயணிகளிடம் அபராதம்! July 12, 2017

வனப்பகுதிக்குள் அத்துமீறி சென்ற சுற்றுலா பயணிகளிடம் அபராதம்!



முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அத்துமீறி சென்ற சுற்றுலா பயணிகளிடம் 56 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்களின் சந்திப்பில் இந்த புலிகள் காப்பகம் உள்ளதால் இங்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

அவ்வாறு வாகனங்களில் வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை தொந்தரவு செய்யவும், சேல்பி எடுக்கவும், மது அருந்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கையை மீறுபவர்கள் மீது கடும் அபராதம் விதிக்கபட்டு வரும் நிலையில், தெப்பகாடு வனபகுதிக்கு உட்பட்ட வட்ட சாலையில், பெங்களுரை சார்ந்த சுற்றுலா பயணிகள் 2 வாகனங்களில் சென்றுள்ளனர்.

அந்த சாலையில் வனத்துறை வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது என்பதால் அந்த வாகனங்களை மடக்கி பிடித்த தெப்பகாடு வனத்துறையினர் அவர்களிடமிருந்து 56 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்தனர்.

Related Posts: