திங்கள், 17 ஜூலை, 2017

கள்ளச்சந்தையில் விற்கும் மதுவை மாணவர்கள் குடிக்கும் அவலம்! July 16, 2017

கள்ளச்சந்தையில் விற்கும் மதுவை மாணவர்கள் குடிக்கும் அவலம்!


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, மது போதையில் பள்ளி மாணவர்கள் சாலையில் விழுந்து கிடந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த 2 மாணவர்கள், பாரதியார் நகரில் கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட மதுவை வாங்கி குடித்துள்ளனர்.

போதை தலைக்கேறிய நிலையில், சைக்கிளில் சென்ற மாணவர்கள், தடுமாறி சாலையில் விழுந்துள்ளனர். அதைக் கண்டு உதவிக்கு வந்தவர்கள், மாணவர்கள் குடித்திருப்பதை அறிந்து அங்கிருந்து சென்று விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பள்ளி நிர்வாகம், மாணவர்களை மீட்டு, பள்ளிக்கு கொண்டு சென்றது. பின்னர், மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.